Idhayam Matrimony

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ஐ.நா. ரூ.316 கோடி நிதியுதவி

வியாழக்கிழமை, 11 டிசம்பர் 2025      உலகம்
Srilanka-Heavy-Rain-2025-12

கொழும்பு, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ.316 கோடி நிதியுதவி அளிக்க உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான 'டித்வா' புயல் இலங்கையை புரட்டி போட்டது. வரலாறு காணாத வகையில் பெய்த பெருமழையால் அந்நாட்டில் உள்ள பதுளை கண்டு, நுவரெல்லா, மாத்தளை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. புயலின் கோரத்தாண்டவத்தால் மொத்தம் 638 பேர் உயிரிழந்த நிலையில், மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 193 பேர் மாயமாகி உள்ளனர்.

இந்த புயலால் இலங்கையில் சுமார் 18 லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 53 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா சார்பில் நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழக அரசு சார்பில் சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அடங்கிய கப்பல் அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ.316 கோடி நிதியுதவி வழங்கப்பட உள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது. ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கை அரசுக்கு, புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கான உதவியாக அடுத்த 4 ஆண்டுகளில் நிவாரண உதவித்தொகை படிப்படியாக வழங்கப்படும் என ஐ.நா. தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து