Idhayam Matrimony

தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை திரும்ப வழங்க 3 நாட்கள் கால அவகாசம்: வரும் 14-ம் தேதி வரை வழங்கலாம் - தேர்தல் ஆணையம்

வியாழக்கிழமை, 11 டிசம்பர் 2025      தமிழகம்
Election-Commision 2023-04-20

சென்னை, தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை திரும்ப வழங்க காலஅவகாசத்தை நீட்டித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நடப்பாண்டில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நடைபெற்றன. அப்போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. எனினும், எஸ்.ஐ.ஆர். பணிகள் நடந்து தேர்தலும் முடிந்து, பீகாரில் என்.டி.ஏ. கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்து கொண்டது.

இதேபோன்று, நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பு அறிவித்தது. தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் வீடு, வீடாக விண்ணப்ப படிவங்களை வாக்கு மைய நிலை அலுவலர்கள் வழங்கினர்.

இந்த விண்ணப்ப படிவங்களை நிரப்பி திருப்பி அளிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 4 என அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், குறுகிய காலத்திற்குள் இந்த பணியை செய்து முடிப்பது என்பது இயலாதது என தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர். நடைமுறைகள் 4-ம் தேதியுடன் முடிவடைய இருந்த சூழலில், கால அவகாசம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது. 

இதன்படி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை திருப்பி ஒப்படைக்க டிசம்பர் 11 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு தமிழகம், கேரளா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இதன்பின்னர், டிசம்பர் 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் இறுதி பட்டியல் பிப்ரவரி 14-ந்தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கான படிவங்களை திருப்பி ஒப்படைப்பதற்கான காலஅவகாசம் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன்படி தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கான படிவங்களை திருப்பி வழங்க டிசம்பர் 14-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதன்பின்னர் வருகிற 19-ம் தேதி தமிழகம், குஜராத் மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். சத்தீஷ்கார், அந்தமான் நிகோபர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் 18-ந்தேதி வரை படிவங்கள் பெறப்பட்டு, 23-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். உத்தர பிரதேசத்தில் 26-ந்தேதி வரை படிவங்கள் பெறப்பட்டு 31-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து