Idhayam Matrimony

காசா அமைதி திட்டத்திற்கு ஆதரவை அளித்த இந்தியா பிரதமர் மோடி அலுவலகம் அறிக்கை

வியாழக்கிழமை, 11 டிசம்பர் 2025      இந்தியா
Modi 2024-12-09

புதுடெல்லி, காசா மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போரால் 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டபோதும், போர்நிறுத்த ஒப்பந்தத்தில் ஹமாஸ் அமைப்பினர் ஈடுபடுகின்றனர் என கூறி அவ்வப்போது இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடியை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசி வழியே நேற்று தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான மூலோபாய உறவை இன்னும் வலுப்படுத்துவதற்கான வழிகளை பற்றி இருவரும் ஆலோசித்தனர். மேற்காசியாவின் சூழல் பற்றிய பார்வைகளை பிரதமர் மோடியுடன் நெதன்யாகு பகிர்ந்து கொண்டார்.

இதுபற்றி பிரதமர் மோடியின் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், காசா அமைதி திட்டத்தினை விரைந்து அமல்படுத்துவது உள்ளிட்ட அந்த பகுதியில் நீடித்த அமைதி ஏற்படுவதற்கான முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார் என தெரிவித்து உள்ளது.

இரு தலைவர்களும், பயங்கரவாதத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து கொண்டதுடன், அனைத்து வடிவிலான பயங்கரவாதத்திற்கும் பூஜ்ய சகிப்பு தன்மையை கொண்டிருக்கிறோம் என மீண்டும் வலியுறுத்தினர். இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருப்பது என ஒப்பு கொண்டனர் என்றும் அந்த செய்தி தெரிவிக்கின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து