Idhayam Matrimony

தங்கம் விலை மீண்டும் உயர்வு

சனிக்கிழமை, 3 ஜனவரி 2026      தமிழகம்
Gold 2024-12-13

சென்னை, ஒரு சவரன் தங்கம் ரூ.640 உயர்ந்து, ரூ.1,00,800-க்கு விற்பனையானது. இதே போல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ரூ.257-க்கு விற்பனையானது. அதன்படி ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 உயர்ந்து, ரூ.2,57,000-க்கு விற்பனையானது.

தங்கத்தின் விலை கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்பு 1 லட்சம் ரூபாயை எட்டிய நிலையில், கடந்த டிசம்பர் 31-ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்தது. தொடர்ச்சியாக தங்கம் விலையில் சரிவு காணப்பட்டது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,580-க்கும், ஒரு சவரன் ரூ.1,00,640-க்கும் விற்பனையானது.

நேற்று காலை நிலவரப்படி தங்கத்தின் விலை சற்று குறைந்து விற்பனையானது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,160-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,520-க்கு விற்பனையானது.  வெள்ளி விலையும் நேற்று காலை நிலவரப்படி கிராமுக்கு ரூ.4-ம், கிலோவுக்கு ரூ.4 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.256-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 56 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

இந்த நிலையில், நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை அதிகரித்து விற்பனையானது. இதன்படி ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை நேற்று காலை ரூ.60 குறைந்த நிலையில், மாலை ரூ.80 உயர்ந்து, ரூ.12,600-க்கு விற்பனையானது. தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.640 உயர்ந்து, ரூ.1,00,800-க்கு விற்பனையானது. இதே போல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ரூ.257-க்கு விற்பனையானது. அதன்படி ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 உயர்ந்து, ரூ.2,57,000-க்கு விற்பனையானது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து