முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டணி குறித்து த.வெ.க.வுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தையா..? செங்கோட்டையன் விளக்கம்

சனிக்கிழமை, 3 ஜனவரி 2026      தமிழகம்
Sengottaiyan 2025-11-18

ஈரோடு, விஜய் தான் தமிழகத்தின் முதல்வர்  என ஏற்றுக்கொள்கிற கூட்டணிதான் த.வெ.க.வில் இணையும் என்று தெரிவித்துள்ள  செங்கோட்டையன் கூட்டணி குறித்து த.வெ.க.வுடன் காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியான தகவல் தொடர்பாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

வேலுநாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு கோபிசெட்டிப்பாளையம் அலுவலகத்தில் செங்கோட்டையன் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். மேலும் த.வெ.க. - காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா? எனற கேள்வியும் எழுப்பப்பட்டது. இந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது;-

அனைவரும் மாற்றம் வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பணியாற்றி வருகிறோம். தி.மு.க. வெற்றி பெறுவதற்காக பழைய ஓய்வுதிய திட்டத்தை நிறைவேற்றி தருவோம் என வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தது. இன்று வரை நிறைவேற்றி தரவில்லை என்பதால் தான் போராட்டம் நடந்து வருகிறது.

த.வெ.க. உடன் கூட்டணிக்கு விருப்பம் தெரிவிப்பவர்கள் யாராக இருந்தாலும் தலைவர் தான் அதனை முடிவு செய்வார். எங்களை பொருத்தவரை விஜய் தான் தமிழகத்தின் முதல்வர்  என ஏற்றுக்கொள்கிற கூட்டணிதான் த.வெ.க.வில் இணையும். அவர்களை வாழ்த்தி வரவேற்போம். த.வெ.க. - காங்கிரஸ் கூட்டணி குறித்து யார் வேண்டுமானாலும் கருத்துகளை சொல்லலாம். ஆனால் பேச்சு வார்த்தை என்பது தலைவர் இருக்கிறபோது அவருடன் கலந்து பேசுவதுதான் பேச்சு வார்த்தையாக இருக்கும்.

அ.தி.மு.க. - தி.மு.க. இரு கட்சிகளையும் தாக்குவது த.வெ.க. தான். வெற்றி என்ற முடிவை த.வெ.க. அடையபோகிறது என்பதால் தான் இரு கட்சிகளும் த.வெ.க.வை தாக்குகிறது. எதிர்க்கட்சி ஆளும் கட்சியை தாக்குவதில்லை. ஆளும் கட்சியின் குறைபாடுகளை எதிர்க்கட்சி சொல்வதில்லை. எல்லாரும் த.வெ.க.வை தான் தாக்குகிறார்கள். மக்கள் ஏற்றிக்கொள்கிற தலைவர் விஜய் தான் என்ற முறையில் நம்மை தான் விமர்சனம் செய்கிறார்கள். மற்றவர்களை அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து