எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை, 2026-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நேற்று நடைபெற்றது. போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் கலெக்டர் அருணா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தமிழர்களின் வீர விளையாட்டாகவும், பாரம்பரியம், கலாசாரத்தை போற்றும் வகையிலும் ஜல்லிக்கட்டு திகழ்கிறது. தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு மற்றும் அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடம் என்ற பெருமையை புதுக்கோட்டை மாவட்டம் பெற்றுள்ளது. அதிக வாடிவாசல்களை கொண்டது மட்டுமல்லாமல், ஜல்லிக்கட்டு காளைகளும், காளையர்களும் அதிகமுள்ள மாவட்டமாகவும் திகழ்கிறது.
அந்த வகையில் இந்த ஆண்டின் (2026) முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நேற்று நடைபெற்றது. தச்சங்குறிச்சி புனித விண்ணேற்பு அன்னை ஆலய திருவிழா மற்றும் புத்தாண்டையொட்டி விழாக்குழுவினர் சார்பில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.
இந்த ஜல்லிக்கட்டில் 900 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதையொட்டி சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் கலெக்டர் அருணா ஆகியோர் தொடங்கி வைத்தனர். புனித விண்ணேற்பு அன்னை ஆலய ஜல்லிக்கட்டு காளை முதல் காளையாக வாடிவாசலில் பாய்ந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


