Idhayam Matrimony

சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள்முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சனிக்கிழமை, 3 ஜனவரி 2026      தமிழகம்
CM-3-2026-01-03

சென்னை, தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 750 பேருக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தால் அண்மையில் நடத்தி முடிக்கப்பட்ட தேர்வுகள் மூலம் 621 காவல் உதவி ஆய்வாளர்கள், 129 தீயணைப்பு நிலைய அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில், இவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 621 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினார். மேலும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வான 129 தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து