Idhayam Matrimony

நெல்லையில் இன்று அரசு விழாவில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு

புதன்கிழமை, 4 மார்ச் 2026      தமிழகம்
Udayanidhi-1 2024-11-17

நெல்லை, நெல்லையில் இன்று நடக்கும் அரசு விழாவில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று சார்பு அணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 3 நாட்கள் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு விழா, நிர்வாகிகள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதன்படி இன்று பிற்பகலில் காரில் நெல்லைக்கு வருகை தருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான கங்கைகொண்டானில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். 

அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். அதில் சுமார் 15 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

இதில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் சுகுமார், ராபர்ட் புரூஸ் எம்.பி., மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., கிரகாம்பெல் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொள்கின்றனர். அதன்பின்னர் பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் மாதா மாளிகையில் நடைபெறும் கட்சியின் 28 சார்பு அணி நிர்வாகிகளுடன் துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடுகிறார். 

தொடர்ந்து இரவில் நெல்லையில் ஓய்வெடுக்கும் உதயநிதி, நாளை (6-ந்தேதி) காலை தென்காசியில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று பின்னர் சங்கரன்கோவில் செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் தென்காசி மாவட்ட செயலாளர்கள் ராஜா எம்.எல்.ஏ., ஜெயபாலன், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் உள்பட திரளான நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். தொடர்ந்து அன்று மாலையில் 4 மணிக்கு வள்ளியூர் சென்று அரசு மருத்துவமனையை திறந்து வைக்கிறார். 

அதன்பின்னர் குமரி மாவட்டம் செல்கிறார். அங்கு இரவு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் உதயநிதி நள்ளிரவில் நெல்லைக்கு வந்து ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து மறுநாள் (7-ந்தேதி) காலை தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து