Idhayam Matrimony

சிவகங்கை தொழிற்பேட்டையில் அமைக்கிறது எம்.ஆர்.எப்.-ன் ரூ.5,300 கோடி மதிப்பிலான புதிய டயர் தொழிற்சாலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

புதன்கிழமை, 4 மார்ச் 2026      தமிழகம்
CM-3-2026-03-04

சென்னை, தமிழகத்தில் புதிய டயர் தொழிற்சாலை அமைப்பதற்கு, அடுத்த 12 ஆண்டுகளில் ரூ.5,300 கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் எம்.ஆர்.எப். நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த தொழிற்சாலை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் அமைய உள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தொடர்பான நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எம்.ஆர்.எப். தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மே.எம்.மாம்மென், துணை தலைவர் அருண் மாம்மென், தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக எம்.ஆர்.எப். நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் வாகன டயர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகளுக்கான ‘கிரீன்பீல்ட்’ உற்பத்தி வசதியை அமைப்பதற்கு வசதியாக, எங்கள் நிறுவனம் நேற்று தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து