Idhayam Matrimony

மிக நீண்ட போருக்கு தயார்: ஈரான்

புதன்கிழமை, 4 மார்ச் 2026      உலகம்
Israel 2024-12-29

தெஹ்ரான், நாங்கள் மிக நீண்ட போருக்குத் தயாராகிவிட்டோம் என்று ஈரானின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரான் உச்சத்தலைவர் காமேனி கொல்லப்பட்டார். மேலும் 700க்கும் அதகமானோர் கொல்லப்பட்டனர். பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் உள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அமெரிக்க படைத்தளங்கள் சேதங்களை சந்தித்துள்ளன. மேலும் அந்நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீதும் ஈரான் நேற்று முன்தினம் முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஈரானின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "நாங்கள் மிக நீண்ட போருக்குத் தயாராகிவிட்டோம், எனவே ஆரம்பத்திலேயே எங்களது மிகவும் பயனுள்ள ஆயுதங்களைப் பயன்படுத்துவது முட்டாள்தனமாக இருக்கும். எதிரியிடம் ஒரு குறிப்பிட்ட அளவு ஆயுதங்கள் மட்டுமே உள்ளன. இந்த உண்மை அனைவருக்கும் தெரியும்" என்றார்.

இதற்கிடையே அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், "ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அமெரிக்க குடிமக்கள் ஓமன் மற்றும் சவுதி அரேபியாவுடனான நில எல்லைகள் வழியாக மத்திய கிழக்கு நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். நீங்கள் பாதுகாப்பாக வெளியேற முடியும் என்று நம்பினால் ஐக்கிய அரபு எமிரேட்சை விட்டு வெளியேறுவது குறித்து பரிசீலிக்குமாறு கேட்டு கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து