எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு தொடர்பாக நடந்த நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தற்போது இறுதியாகியுள்ளது.
தேர்தல் பணிகள்...
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரச்சாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
தி.மு.க. கூட்டணியில்...
இதனிடையே, சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, மக்கள் நீதி மய்யம், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பேச்சுவார்த்தை குழு..
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட தி.மு.க. பேச்சுவார்த்தை குழு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இழுபறி நீடித்தது....
அதேவேளை, தி.மு.க. , காங்கிரஸ் இடையே கூட்டணி தொகுதி பங்கீட்டில் கடந்த நாட்களாக தொடர்ந்து இழுபறி நிலவி வந்தது. டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவும், காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழுவும் 2 முறை தொகுதி பங்கீடு குறித்து பேசின. ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. அதன்படி, காங்கிரஸ் 41 தொகுதிகளையும், 2 ராஜ்ய சபா சீட்டும் கேட்டது. ஆனால், தி.மு.க.வோ 25 தொகுதிகள் , ஒரு ராஜ்ய சபா சீட் மட்டும் தருவதாக கூறியது. இதனால், தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது.
ப.சிதம்பரம் சந்திப்பு...
தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்ற தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தனது அதிருப்தியை கட்சி மேலிடத்தில் தெரிவித்தார். இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இதையடுத்து பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு 41 தொகுதிகள், 2 ராஜ்ய சபா சீட் என்று கேட்ட காங்கிரஸ் பின்னர் 39 தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட் என்றும் பின்னர் 36 தொகுதிகள் 2 ராஜ்யசபா சீட் என்றும் படிப்படியாக இறங்கி வந்தது.அதேபோல், தி.மு.க.வும் 25 தொகுதிகள், 1 ராஜ்ய சபா சீட்டில் இருந்து 28 தொகுதிகள், 1 ராஜ்ய சபா சீட் என்ற அளவுக்கு இறங்கி வந்தது.
ஒப்பந்தம் கையெழுத்து....
இந்நிலையில், தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டு தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


