Idhayam Matrimony

விசில் அடித்த த.வெ.க.வினர்: செங்கோட்டையன் கிண்டல்

ஞாயிற்றுக்கிழமை, 8 பெப்ரவரி 2026      தமிழகம்
Senkotaiyan- 2025-09-05

ஈரோடு, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் த.வெ.க. நிர்வாகக் குழுத் தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது த.வெ.க.வினர் விசில் அடித்து இடையூறு செய்த நிலையில் விசில் அடிக்கிறதை அவர்கள் நிறுத்த மாட்டாங்க... என்று கிண்டலாக தெரிவித்தார். 

த.வெ.க. கட்சிக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கியுள்ளது. இதையடுத்து த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், "நமக்கு கிடைத்திருப்பது விசில் சின்னம். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தூங்கிக் கொண்டிருப்பவர்கள் காதில் விசில் அடித்து விடாதீர்கள். ஓட்டு போய்விடும். வயதாகி தடுமாறிக் கொண்டிருக்கும் பெரியவர்களிடத்தில் விசில் அடித்தால் அவர் தடுமாறி போய்விடுவார். எனவே விசிலை பொறுத்தவரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று கூறியது பரபரப்பி ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் த.வெ.க. நிர்வாகக் குழுத் தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது த.வெ.க.வினர் விசில் அடித்து இடையூறு செய்தனர். அப்போது அங்கிருந்த நிர்வாகிகள் விசில் அடிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். ஆனாலும் தொடர்ந்து த.வெ.க.வினர் விசில் அடித்து இடையூறு செய்தனர். அப்போது பேசிய செங்கோட்டையன், "விசில் அடிச்சிட்டு போகட்டும் விடுங்க... ஒன்னும் பண்ண முடியாது போயிடலாம் வாங்க... விசில் அடிக்கிறதை நிறுத்த மாட்டாங்க... என்று கிண்டலாக தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து