Idhayam Matrimony

தே.மு.தி.க.வுடன் கூட்டணியா..? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 8 பெப்ரவரி 2026      தமிழகம்
EVa-Velu 2023 04 02

சென்னை, தே.மு.தி.க.வுடன் தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையா என்ற தகவலுக்கு அமைச்சர் எ.வ.வேலு விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க தலைமையிலான கூட்டணி, அதேபோல் அ.தி.மு.க. -பா.ஜ.க. அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. அதேபோல் விஜய்யின் த.வெ.க.வும் தனித்துப் போட்டியிட உள்ளது.

234 தொகுதிகளிலும் விருப்ப மனு விநியோகத்தை த.வெ.க. தொடங்கி உள்ளது. சட்டசபை தேர்தலுக்கான கூட்டணியை இன்னும் இறுதி செய்யாத நிலையில் 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறும் பணியைத் தே.மு.தி.க. தொடங்கி உள்ளது. இந்நிலையில் கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க.வுடன் தி.மு.க. சார்பில் அமைச்சர் எ.வ.வேலு பேசி வருவதாக தகவல் வெளியான நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், தே.மு.தி.க.வுடன் எந்த பேச்சுவார்த்தையும் நான் நடத்தவில்லை. கூட்டணி குறித்து தி.மு.க. தலைமை தான் முடிவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து