Idhayam Matrimony

மத்திய அரசின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமாகியுள்ளது: மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் பெருமிதம்

ஞாயிற்றுக்கிழமை, 8 பெப்ரவரி 2026      இந்தியா
peaus-Ghoyal 2023-07-20

புதுடில்லி, மத்திய அரசின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமாகியுள்ளது என்றும், இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் நமது விவசாயிகளுக்கு பெரிதும் உதவும் என்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; அமெரிக்கச் சந்தைகள் இந்திய விவசாயிகளுக்கு மிகப்பெரிய மதிப்பையும், கூடுதல் வருமானத்தையும் வழங்கும். ஏற்கனவே 55 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வேளாண் மற்றும் மீன் பொருட்களை ஏற்றுமதி செய்யும் இந்திய விவசாயிகளுக்கு இந்த ஒப்பந்தம் பெரிதும் உதவும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகின் இறக்குமதி 2 டிரில்லியன் டாலராக உயரும் என்பதால், அமெரிக்கப் பொருட்களுக்கான தேவையும் அதிகரிக்கும். மத்திய அரசின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமாகியுள்ளது. வர்த்தகத்துறையில் அனுபவம் வாய்ந்த பேச்சுவார்த்தைக் குழுவினர் இடம்பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து