Idhayam Matrimony

வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய புயல் சின்னம்: வரும் 22-ம் தேதி 3 மாவட்டங்களில் மழை

வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2026      தமிழகம்
Weather 2024-12-02

சென்னை, தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 22-ல் திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த பிப். 16 ஆம் தேதி ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு - வடமேற்கு பகுதியில் நகர்ந்து அதே பகுதியில் நிலைகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய பெருங்கடல், அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது மேற்கு - வடமேற்கு நோக்கி நகரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே பிப்ரவரி 21, 22 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி (நேற்று) உருவாக வாய்ப்புள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

பிப். 20-ல் தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். பிப். 21-ல் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனியில் ஆகிய 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. பிப்ரவரி 22-ல் திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து