எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழ்நாட்டுக்குள் தேசிய ஜனநாயகக் கூட்டணி வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா? வந்தால் நம் அனைவரின் இடஒதுக்கீடும் காலி என்று மகாராஷ்டிர மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு நீக்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு நீக்கியுள்ளதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதான் இஸ்லாமிய மக்களுக்கு சிறுபான்மையினருக்கு எதிரான பா.ஜ.க. அறிவித்திருக்கும் ரம்ஜான் பரிசா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், மகாராஷ்டிரத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை நீக்கிய பா.ஜ.க.. இதைத்தான் இந்தியா முழுவதும் செய்யத் துடிக்கிறார்கள். அண்மையில் மறைந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் 2014-ல் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் முடிவை எடுத்தார்.
அவர் மறைந்த துயரம் அனைவரின் மனதில் இருந்தும் அகல்வதற்குள் அவர் எடுத்த முடிவை நீக்கியுள்ளது சிறுபான்மையினர் வெறுப்பில் ஊறிப்போன பா.ஜ.க. இதுதான் இஸ்லாமிய மக்களுக்கு சிறுபான்மையினருக்கு எதிரான பா.ஜ.க. அறிவித்திருக்கும் ரம்ஜான் பரிசா? தப்பித்தவறிக்கூட தமிழ்நாட்டுக்குள் தேசிய ஜனநாயகக் கூட்டணி வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா? வந்தால் நம் அனைவரின் இடஒதுக்கீடும் காலி.
இவர்களுக்கு ஒருநாளும் வளர்ச்சி அரசியல் தெரியாது; தெரிந்ததெல்லாம் மதவெறி சூழ்ச்சி அரசியல் மட்டும்தான். இத்தகைய வெறுப்பு எஞ்சின்கள் தமிழ்நாட்டில் ஓட அனுமதிக்க மாட்டோம்! "தமிழ்நாடா என்.டி.ஏ.-வா?" எனும் 2026 ஜனநாயகப் போரில் தமிழ்நாடே வெல்லும்!" என்று பதிவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


