எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாகர்கோவில், கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை அருகே ரூ.1.45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயிலை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார்.
முன்னதாக அவர் கன்னியாகுமரியை அடுத்த பெருமாள்புரம் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் புதிதாக கட்டப்பட்டுள்ள 90 வீடுகளை திறந்து வைத்து அங்குள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சிகளுக்கு பின்னர் முதல்வர் அரசு விருந்தினர் மாளிகைக்கு ஓய்வெடுக்க சென்றார். பின்னர் மாலை கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் வழியில் புத்தளம் கல்லடி விளையில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலை மற்றும் ஸ்டாலின் படிப்பகத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு சர்.சி.பி. ராமசாமி அய்யர் பூங்காவில் ரூ. 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பொன்னப்ப நாடார் சிலையை திறந்துவைத்து பேசினார். இரவு நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் முதல்வர், இன்று (புதன்கிழமை) கன்கார்டியா பள்ளி திடலில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுமார் 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பல்வேறு திட்டப்பணிகளை தொடக்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார். பின்னர் காலை 10.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து கார் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


