எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, வடகிழக்கு திசையில் நகா்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய வங்கக்கடலில் திங்கள்கிழமை (பிப்.23) காலை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து அதே பகுதிகளில் நிலவுகிறது. இது வடகிழக்கு திசையில் நகா்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும்.
இந்த நிலையில், தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தென்தமிழகம் மற்றும் மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்கள், அதனையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (பிப்.24) முதல் மாா்ச் 1 வரை மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் 40 மி.மீ. மழை பதிவானது. பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), சிவலோகம், குழித்துறை, சுருளக்கோடு, புத்தன் அணை- தலா 30 மி.மீ., கயத்தாறு (தூத்துக்குடி), பாலமோா் (கன்னியாகுமரி), திருப்பதிசாரம், சிற்றாறு, சிவகிரி (தென்காசி), கோவில்பட்டி (தூத்துக்குடி), கழுகுமலை (தூத்துக்குடி), ஆயிக்குடி (தென்காசி), எழுமலை (மதுரை)- தலா 20 மி.மீ. மழை பதிவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


