Idhayam Matrimony

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தென்னக ரயில்வே இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் : கனிமொழி எம்.பி. தகவல்

செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2026      தமிழகம்
Kanimozhi

தென்னக ரயில்வே பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று கனிமொழி எம்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில் தினமும் 200க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தினமும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். அலுவலக பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் என அனைத்து தரப்பு மக்களும் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே, எழும்பூர் ரயில் நிலையத்த்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் கடந்த 20ம் தேதி முதல் 40 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 5ம் தேதி வரை 45 நாட்களுக்கு பெரும்பாலான புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

புறநகர் ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டு, ரயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால் அலுவலகம் செல்வோர், கல்லூரி செல்வோர் என அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதனிடையே நேற்று 85க்கும் மேற்பட்ட புறநகர் ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், தென்னக ரயில்வே மெத்தனமாக செயல்படக்கூடாது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், 

நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த சில நாட்களாக பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுவருவதும், அதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது. ஏற்கனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்றும் 49 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது, அன்றாடம் பணிக்குச் செல்வோர் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை கடும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. குறிப்பாக வரும் வாரங்களில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், தென்னக ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து