எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஏ.ஐ. உச்சி மாநாட்டில் ஆடையை களைந்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கைது செய்யப்பட்டார். அவரை நான்கு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற ஏ.ஐ. உச்சி மாநாட்டுக்குள் கடந்த 20-ம் தேதி நுழைந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், தாங்கள் அணிந்திருந்த டிசர்ட்டை களைந்து பிரதமர் மோடிக்கு எதிராகவும், இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
இந்நிலையில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்ததற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது நமது வரலாற்றுப் பாரம்பரியம். அது நமது ரத்தத்தில் கலந்துள்ளது. இது ஒவ்வொரு இந்தியரின் ஜனநாயக உரிமை. சமரசம் செய்து கொண்ட பிரதமருக்கு எதிராக தேச நலனுக்காக அச்சமின்றி குரல் எழுப்பிய இளைஞர் காங்கிரசின் சக உறுப்பினர்களை நினைத்த நான் பெருமைப்படுகிறேன்.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் நாட்டின் நலன்கள் சமரசம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் நமது விவசாயிகளுக்கும் ஜவுளி தொழிலுக்கும் தீங்கு விளைவிக்கும். மேலும் நமது தரவுகளை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும். இந்த உண்மையை தேசத்துக்கு எடுத்துக் கூறியதற்காக இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் மற்றும் பிற இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டிருப்பது சர்வாதிகார போக்கு மற்றும் கோழைத்தனத்துக்கு எடுத்துக்காட்டு. காங்கிரஸ் கட்சியும் நானும் நமது சக உறுப்பினர்களுக்கு ஆதரவாக உறுதியாக நிற்கிறோம். அச்சம் வேண்டாம். உண்மையும் அரசியலமைப்பும் எங்களுடன் உள்ளன’’ என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


