எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சண்முக சுந்தரம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கரூர் மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த கலைச்செல்வி பொருளியல் மற்றும் புள்ளியியல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். பொருளியல், புள்ளியியல் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயா சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த சினேகா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த மாலதி ஹெலன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் ஆட்சியரான ரவிகுமாரை கரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசு பணியில் இருந்த சந்திர சேகர் சாகமூரி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும முதன்மை செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.ஏ.எஸ் அதிகாரியான சண்முக சுந்தரம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.ஏ.எஸ் அதிகாரியான நே.பொன்மணி ஈரோடு வணிக வரி இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


