எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழக போலீஸ் துறைக்கு ரூ.124.37 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மென்பொருளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழக காவல்துறையின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக 'சி.சி.டி.என்.எஸ். 2.0' என்ற மென்பொருள் ரூ.124.37 கோடியில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த மென்பொருள் காவல்துறை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இது ஒரு மேம்பட்ட தொழில்நுட்பமாகும். இதில் சமுதாய சேவைப் பதிவேடு (சி.எஸ்.ஆர்.), முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) மற்றும் முதல் நிலை விசாரணை ஆகியவைகளைப் பதிவு செய்ய இயலும். மேலும் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை மற்றும் விசாரணை அறிக்கைகள் ஆகியவைகளை ஆன்லைனில் உடனடியாக நீதிமன்றத்துக்கும் அனுப்ப முடியும். பொதுமக்கள் ஆன்லைனில் புகாரினைப் பதிவு செய்தல், சமுதாய சேவைப் பதிவேடு, முதல் தகவல் அறிக்கை மற்றும் ஆன்லைன் புகார் ஆகியவற்றின் தற்போதைய நிலையை இந்த மென்பொருள் மூலம் அறிந்து கொள்ளலாம். கைது செய்யப்பட்ட நபரின் விவரங்களை கூட இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சாலை விபத்து ஆவணங்களைப் பதிவிறக்க செய்தல் ஆகிய சேவைகளையும் பொதுமக்கள் பெறலாம். இந்த புதிய மென்பொருள் சேவையை போன்று டிஜிட்டல் கைரேகை சேகரிப்பு என்ற அமைப்பும் காவல் துறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 2 திட்டங்களும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த 2 புதிய திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


