எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தேர்தல் முடிந்த பின்பாக வழக்கை எடுத்து விசாரிக்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் சார்பில் வக்கீல் ஜெய சுகின், நரேந்தர் குமார் வர்மா ஆகியோர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:-
தேர்தலுக்கு முன்பு இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதால் மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது. இலவச வாக்குறுதி திட்டங்களால் ஏற்படும் நிதிசார் பாதிப்புகள், அதற்கான நிதி முதலீடு குறித்து அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும்.
எனவே, தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க மத்திய அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் உத்தரவிட வேண்டும். இதுபோன்ற அறிவிப்புகளை தடுக்க தேர்தல் நடத்தை விதிகளை திருத்த வேண்டும். இலவச வாக்குறுதி திட்டங்களின் சாத்தியக் கூறுகளை, நிதி ஆயோக், ரிசர்வ் வங்கி போன்றவற்றின் நிபுணர்களை கொண்ட சுதந்திரமான குழுவை கொண்டு ஆராய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், 'கேரள மாநிலத்தில் தேர்தல் வருகிறது என்பதால் இதுபோன்ற ஒரு மனுவை தொடர்ந்தார்கள். தற்போது நீங்கள் தமிழ்நாட்டுக்கு தேர்தல் வருகிறது என்று இந்த மனுவை தாக்கல் செய்கிறீர்கள். எனவே இதை தற்போது ஏற்க முடியாது. தேர்தல் முடிந்த பின்பாக வழக்கை எடுத்து விசாரிக்கலாம். தற்போது அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை' என்று தெரிவித்து வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


