எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டிவனம், பா.ம.க. கூட்டணி குறித்து டாக்டர் ராமதாஸ் இன்று முடிவு செய்கிறார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சி யாருக்கு சொந்தம் என்ற போட்டி நிலவி வருகிறது. இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அன்புமணி அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து விட்டார். ஆனால் ராமதாஸ் தரப்பு பா.ம.க. எந்த அணிக்கு செல்வது என்ற முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளது.
தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் நாங்கள் வெளியேறி விடுவோம் என அக்கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி கூறி விட்டது. அ.தி.மு.க. கூட்டணியில் அன்புமணி இடம் பெற்று உள்ளதால் அக்கூட்டணிக்கும் ராமதாஸ் தரப்பு பா.ம.க. செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளிடம் இன்று ஆலோசனை நடத்தி முடிவு செய்ய டாக்டர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். இதற்காக பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறுகிறது.
இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பா.ம.க., வன்னியர் சங்கம் உள்ளிட்ட சார்பு அமைப்புகளில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் என் தலைமையில் நடைபெறுகிறது. அதில் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு அதில் கூறி உள்ளார். எனவே இன்று நடைபெறும் கூட்டத்திற்கு பின் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பை ராமதாஸ் வெளியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


