Idhayam Matrimony

போரை நான் தடுத்திருக்காவிட்டால் இந்தியாவின் தாக்குதலில் பாக்., பிரதமர் ஷெரீப் இறந்திருப்பார்: அதிபர் ட்ரம்ப் பரபரப்பு பேச்சு

புதன்கிழமை, 25 பெப்ரவரி 2026      உலகம்
Trump 2023 03 05

நியூயார்க், போரை நான் தடுத்திருக்காவிட்டால் இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இறந்திருப்பார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் மாநில ஒன்றிய உரையின் போது பேசிய அமெரிக்க ட்ரம்ப், "அதிபராக எனது முதல் 10 மாதங்களில் 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன். நான் தலையிடாமல் இருந்திருந்தால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் ஏற்பட்டிருக்கும். போரை நிறுத்த நான் ஈடுபடாமல் இருந்திருந்தால் பாகிஸ்தானில் 3.5 கோடி மக்கள் இறந்திருப்பார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் என்னிடம் கூறினார்.

போரை நான் தடுத்திருக்காவிட்டால் இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் பிரதமர் இறந்திருப்பார். எனது நிர்வாகம் 9-வது போரை முடிவுக்குக் கொண்டு வர மிகவும் கடினமாக உழைத்து வருகிறது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர், அன்றைய தினத்தில் நான் அதிபராக இருந்திருந்தால் இது ஒருபோதும் நடந்திருக்காது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், உயிருடன் உள்ள அல்லது இறந்த ஒவ்வொரு பணயக்கைதியும் வீடு திரும்புவதை உறுதி செய்து வருகிறோம்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமெரிக்கர்களுக்கு நாங்கள் பெருமையுடன் பாதுகாப்பை மீட்டெடுத்து வருகிறோம். எனது வரிவிதிப்பு அச்சுறுத்தல் காரணமாக தீர்த்து வைக்கப்பட்டு அமைதி நிலவுகிறது" என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து