Idhayam Matrimony

இன்ஸ்டாவில் 10 கோடி பின்தொடர்பாளர்கள்: முதல் உலகத்தலைவராக பிரதமர் மோடி சாதனை..!

வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2026      இந்தியா
Modi 2024-12-09

புதுடெல்லி, இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் என்ற சாதனையைப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பைவிட இரண்டு மடங்கு அதிக பின்தொடர்பாளர்கள் இன்ஸ்டாகிராமில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014 ஆம் ஆண்டு மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் சமூக ஊடகப் பக்கத்தில் பிரதமர் மோடி கணக்கைத் தொடங்கினார். உலக அரசியல் தலைவர்களின் பிரதமர் மோடிக்கு அடுத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 4.32 கோடி பின்தொடர்பாளர்களை கொண்டுள்ளார்.

இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவை 1.5 கோடி பேரும், பிரேசில் அதிபரை 1.44 கோடி பேரும், துருக்கி அதிபரை 1.16 கோடி பேரும், அர்ஜென்டினா அதிபரை 64 லட்சம் பேரும் பின்தொடர்கிறார்கள். பிரதமர் மோடிக்கு அடுத்த இடங்களில் உள்ள 5 உலக அரசியல் தலைவர்களின் மொத்த பின்தொடர்பாளர்களைவிட மோடியை அதிக பேர் பின்தொடர்கிறார்கள்.

இந்திய அளவிலும் மோடிக்கும் மற்ற அரசியல் தலைவர்களின் பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கைக்கும் நிறைய இடைவெளி இருக்கின்றது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை 1.61 கோடி பேரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை 1.26 கோடி பேரும் பின்தொடர்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து