எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ரூ.215.79 கோடியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (26.02.2026) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 175 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 16 திருக்கோவில்களில் 22 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 215 கோடியே 79 லட்சம் ரூபாய் செலவில் 21 திருக்கோவில்களில் 53 முடிவுற்ற திருப்பணிகள், இணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் 10 ஆய்வர் அலுவலகக் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம், பழனி, தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் 53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கந்தன் இல்லம், கடம்பன் இல்லம் மற்றும் இடும்பன் குடில் ஆகிய புதிய தங்கும் விடுதிகள் கட்டுதல் மற்றும் திருக்கோவில் வடக்கு கிரிவீதியில் வரிசை மண்டபம் கட்டும் பணிகள்; தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோவிலின் கடற்கரை பரப்பில் ஏற்படும் கடல் அரிப்பை தடுக்கும் பொருட்டு மூழ்கிய கடல்சார் அலை தடுப்பு சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைக்கும் பணி; திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 29.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தற்போதுள்ள மலைப்பாதையை ஒட்டி புதிய மலைப்பாதை அமைக்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம். சமயபுரம், மாரியம்மன் திருக்கோவிலில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக 15.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கொள்ளிடம் ஆற்றிலிருந்து நாள்தோறும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரும் பணி; தென்காசி மாவட்டம், குற்றாலம், திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோவிலில் 9.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி; தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோவிலில் 3.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோவில் தெற்கு பகுதியில் உள்ள மொட்டை கோபுரத்தினை ஐந்து நிலை ராஜகோபுரமாக உயர்த்தி கட்டும் பணி என மொத்தம் 175.23 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 22 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 68.47 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் குடில்கள் மற்றும் வளாகங்கள், கடல் அரிப்பு தடுப்புச் சுவர், சஷ்டி மண்டபங்கள், பூஜைப் பொருட்கள் விற்பனை அங்காடி, விபூதி மற்றும் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் கூடங்கள், சுகாதார வளாகங்கள், திருக்கோவில் நுழைவாயில் மற்றும் பசு மடம், திருள்ளூர் மாவட்டம் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோவிலில் 39.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நிர்வாக அலுவலக வளாகம், பக்தர்கள் தங்கும் அறைகள், பூஜைப் பொருட்கள் விற்பனை அங்காடி, முடிகாணிக்கை மண்டபம், சுகாதார வளாகம், விரிவாக்கப்பட்ட அன்னதானக் கூடம், பொங்கல் மண்டபம், மதுரை மாவட்டம் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் 35 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதிகளையும். என மொத்தம் 215.79 கோடி ரூபாய் செலவிலான 65 முடிவுற்ற பணிகளை தமிழ்நாடு முதல்வர் திறந்து வைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


