Idhayam Matrimony

72 குண்டுகள் முழங்க இ. கம்யூ., கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு அரசு சார்பில் மரியாதை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வீர வணக்கம்

வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2026      தமிழகம்
CM-2-2026-02-26

சென்னை, மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு சார்பில் முழு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வீர வணக்கம் செலுத்தினார்.

வயது மூப்பால்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் சுதந்திர போராட்ட வீரருமான நல்லகண்ணு நேற்று முன்தினம் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 101. சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் என அனைவரும் நல்லகண்ணு உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

தானமாக வழங்க... 

இதனைத் தொடர்ந்து, மலர் வளையம் வைத்து மறைந்த நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பின்னர், 72 குண்டுகள் முழங்க 24 காவலர்கள் 3 முறை வானத்தை நோக்கி சுட்டனர். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைவர்கள் நல்லகண்ணுக்கு ‘வீர வணக்கம்’ செலுத்தினர். நல்லகண்ணு இறப்புக்கு பிறகு தன்னுடைய உடலை மருத்துவமனைக்கு தானமாக வழங்க விருப்பம் தெரிவித்திருந்தார்.

ஆயிரக்கணக்கானோர்... 

இந்நிலையில், நல்லகண்ணுவின் உடல் அவரது விருப்பப்படி சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தானமாக ஒப்படைக்கப்படுகிறது. நல்லகண்ணுவின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தி அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து