Idhayam Matrimony

தூத்துக்குடி தீப்பெட்டி குடோனில் தீ விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம்

திங்கட்கிழமை, 2 மார்ச் 2026      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை, தூத்துக்குடி தீப்பெட்டி குடோனில் தீ விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் நிவாரணமாக வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், பாண்டவர்மங்கலம் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான தீப்பெட்டி குடோனில் நேற்று (02.03.2026) காலை சுமார் 8.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த தீ விபத்தில் கோவில்பட்டி வட்டம், கொடுக்கம்பாறை கிராமம், விஜயாபுரி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 27) த/பெ.சமுத்திரம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விருதுநகர் மாவட்டம், சிவகாசி, பேரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுடலைமுத்து (வயது 42) மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கோவில்பட்டி வட்டம், கிழவிபட்டி கிராமம், துரைசாமிபுரம் பகுதியில் வசித்துவரும் கணேசன் (வயது 47) ஆகிய இருவருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து