எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் வரும் 11-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இப்பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கான இடங்களை பார்வையிட்டு தேர்வு செய்ய பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் திருச்சி வந்தனர்.
திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான நிலத்தை நேரில் பார்வையிட்டு அவர்கள் ஆய்வு செய்தனர். பின்னர், நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம், திருச்சியில் மாநாடு போல நடத்தப்படவுள்ளது. இதில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
பஞ்சப்பூர் பகுதியில் உள்ள தனியார் இடத்தையும், பின்னர், திருச்சி ஜி கார்னர் மைதானத்தையும் ஆய்வு செய்து இதில் ஏதாவது ஒரு இடத்தில் பொதுக்கூட்டத்தை நடத்தவுள்ளோம். நாங்கள் இன்னும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் அது குறித்து பேசுவோம். எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவை சந்திக்க தில்லி சென்றுள்ளார். சந்திப்பு எதற்காக என்பது அவர்கள இருவருக்கும்தான் தெரியும். எங்கள் கூட்டணியில் த.வெ.க. இணையுமா என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளும் வீழ்ச்சி அடைந்துள்ளது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


