Idhayam Matrimony

தஞ்சையில் நாளை விஜய் பங்கேற்கும் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி

திங்கட்கிழமை, 2 மார்ச் 2026      தமிழகம்
Vijay 2023-12-30

தஞ்சாவூர், தஞ்சாவூரில் நாளை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்கும் த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்துக்கு அனுமதி கோரி அக்கட்சி நிர்வாகிகள் காவல் துறையினரிடம் மனு அளித்திருந்த நிலையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதி நிர்வாகிகளைத் த.வெ.க. தலைவர் விஜய் சந்தித்து பேச திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் 10 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிகழ்ச்சியில் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 4 ஆயிரத்து 900 நிர்வாகிகள் மட்டும் பங்கேற்பார்கள் என்றும் இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு, க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து திடலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தஞ்சை த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்துக்கு அனுமதி கோரி, மாவட்டக் காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் இரா. ராஜாராமிடம் த.வெ.க. மத்திய மாவட்டச் செயலர் ஆர். விஜய் சரவணன் உள்ளிட்டோர் மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து