Idhayam Matrimony

பொள்ளாச்சி - பாலக்காடு இடையே புதிய ரயில் சேவைக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2026      இந்தியா
Suresh-Gopi 2024-08-27

திருவனந்தபுரம், பாலக்காடு-பொள்ளாச்சி வழித்தடத்தில் புதிய ரயில் சேவைக்கான கேரளாவின் நீண்டகால கோரிக்கையை ரயில்வே அமைச்சகம் நிறைவேற்றியுள்ளதாக மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, சுரேஷ் கோபிக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பொள்ளாச்சி - பாலக்காடு இடையே புதிய எம்.இ.எம்.யு. ரயில் சேவைக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். இந்த புதிய சேவை கேரள மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளை இணைக்கும் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும், மேலும் பயணிகளின் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சேவை தொடர்பாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி சமூக வலைத்தள பக்கத்தில் ரயில்வே அமைச்சரின் கடிதத்தின் நகலை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், ரயில் சேவை தொடர்பான கோரிக்கையினை பரிசீலித்து பயணிகளின் வசதிக்காக உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து