முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்காசியில் ரூ.44.05 கோடியில் புதிய அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2026      தமிழகம்
DCM-1-2026-03-06

தென்காசி, தென்காசி மாவட்டத்தில் 7,127 பயனாளிகளுக்கு ரூ44.05 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு துணை முதல்வர்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 500 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் 1,000 பயனாளிகளுக்கு ரூ.3.50 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மைத் துறையின் சார்பில் 204 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.39 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

மேலும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 1,000 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 629 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.80 கோடி மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள், சக்கர நாற்காலிகள், காதொலி கருவிகள் உள்ளிட்ட உதவி உபகரணங்களையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.15.00 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

சமூக நலத்துறையின் சார்பில் 105 பயனாளிகளுக்கு ரூ.5.00 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 95 பயனாளிகளுக்கு 1.39 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 3,500 மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்ட பயனாளிகளுக்கு ரூ.35.35 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், கூட்டுறவுத் துறையின் சார்பில் 67 பயனாளிகளுக்கு ரூ.29.00 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், முன்னோடி வங்கியின் சார்பில் 4 பயனாளிகளுக்கு கல்வி கடன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் என மொத்தம் 7,127 பயனாளிகளுக்கு ரூ44.05 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து