எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னை மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறை இயக்குநரகத்தில் காஞ்சிபுரம், வேலூர், கடலூர் மற்றும் கோவை ஆகிய இடங்களில் செயல்படும் அரசு தானியங்கி பணிமனைகளை நவீனமயமாக்குதல் மற்றும் தரம் உயர்த்துதல், கோவை, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பணிமனைகளில் நவீன ரக வாகனங்களை பழுது நீக்கம் செய்திட மின்னணு பழுது கண்டறியும் கருவிகள் பயன்பாட்டிற்காக கொண்டு வருதல் ஆகிய திட்டங்களை தொடங்கி வைத்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இருவருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
தமிழக முதல்வரின் வழிகாட்டுதல்களின்படி போக்குவரத்து துறை அமைச்சர் 2024-25ஆம் ஆண்டிற்கான சட்டப் பேரவை போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை எண்.48-ல் அறிவித்தபடி காஞ்சிபுரம், வேலூர், கடலூர் மற்றும் கோவை ஆகிய இடங்களில் செயல்படும் அரசு தானியங்கி பணிமனைகளை நவீனமயமாக்குதல் மற்றும் தரம் உயர்த்துதல் திட்டத்திற்கு ரூ.40,00,000/- (ரூபாய் நாற்பது லட்சம் மட்டும்) செலவில் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசாணைகள் வெளியிடப்பட்டன.
அதனடிப்படையில் காஞ்சிபுரம், வேலூர், கடலூர் மற்றும் கோவை ஆகிய இடங்களில் செயல்படும் அரசு தானியங்கி பணிமனைகளை நவீனமயமாக்குதல் மற்றும் தரம் உயர்த்துதல் திட்டம் நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளவற்றை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரால் சென்னை தலைமைச் செயலகத்தில் 27.02.2026 அன்று துவக்கி வைக்கப்பட்டது.
மேலும் 2025-26-ம் ஆண்டிற்கான சட்டப் பேரவை போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை எண்.48-ன் மூலம் ரூ.30,00,165/- (ரூபாய் முப்பது லட்சத்து நூற்று அறுபத்து ஐந்து மட்டும்) செலவில் அரசு தானியங்கி பணிமனை கோவை, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகியவற்றில் நவீன ரக வாகனங்களை பழுது நீக்கம் செய்திட மின்னணு பழுது கண்டறியும் கருவிகள் ஆகியவை போக்குவரத்துத் துறை அமைச்சரால் சென்னை தலைமைச் செயலகத்தில் துவக்கி வைக்கப்பட்டன. மேலும் இவ்விழாவில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட இரண்டு நபர்களுக்கு பணி நியமன ஆணைகளும் போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


