எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மாநிலங்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி. பதவியிடங்கள் ஏப்ரல் 2-ம் தேதி காலியாகின்றன. இந்த பதவியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பு மனு தாக்கல் பிப்ரவரி 26-ம் தேதி தொடங்கியது. தி.மு.க. சார்பில் திருச்சி சிவா எம்.பி., கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் மற்றும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக், தே.மு.தி.க. சார்பில் எல்.கே.சுதீஷ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரை எம்.பி. போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் மற்றொரு இடம் கூட்டணி கட்சியான பா.ம.க.வுக்கு ஒதுக் கீடு செய்யப்பட்டது. வேட்புமனு தாக்கலுக்கு நேற்று கடைசி நாள் என்பதால் தி.மு.க.. அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
முதல்வர் முன்னிலையில் தி.மு.க. சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக், தே.மு.தி.க. சார்பில் எல்.கே.சுதீஷ் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்பு மனுவை தனித்தனியாக தாக்கல் செய்தனர்.
முன்னதாக, அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிக்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, கே.பி.அன் பழகன் ஆகியோர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி மற்றும் பா.ம.க. எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் வேட்புமனுவை அளித்தார். அன்புமணி ராமதாசுக்கு, மாற்று வேட்பாளராக அவரது மனைவி சவுமியா அன்புமணி வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் உதயகுமார், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க. எம்.எல்.ஏ.க் கள் சதாசிவம், சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
தேர்தல் நடத்தும் அதிகாரியும், தமிழக சட்டசபை கூடுதல் செயலாளரு மான சாந்தி வேட்பு மனுவை பெற்றுக்கொண்டார். வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் உறுதிமொழி படிவத்தை வாசித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வேட்புமனு தாக்கலுக்கான நேரம் முடிவடைவதற்கு 1 நிமிடத்திற்கு முன்பு பா.ம.க. நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாசின் உதவியாளர் சாமிநாதன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் நேற்று (6-ம் தேதி) வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. அப்போது மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்த 6 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, இவர்கள், அனைவரும் போட்டியின்றி தேர்வாக உள்ளனர். 9-ம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஆகும்.
இதனிடையே பத்மராஜன், கே.பி.எம்.ராஜா, மேஷாக் கிருபாகரன், அக்னி ஆழ்வார், கந்தசாமி, சாமிநாதன் ஆகியோர் சுயேச்சையாக தாக்கல் செய்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. பொதுவாக கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களுக்கும், சுயேச்சை வேட்பாளர்களுக்கும் 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிந்து கையெழுத்திட்டு இருக்க வேண்டும். அந்தவகையில், தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி சார்பில் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள 6 பேரின் வேட்பு மனுக்களை தவிர்த்து இதர மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


