Idhayam Matrimony

திருச்சி பஞ்சப்பூரில் இன்று நடைபெறும் என்.டி.ஏ சார்பில் பொதுக்கூட்டம்; பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு: இ.பி.எஸ். உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்

செவ்வாய்க்கிழமை, 10 மார்ச் 2026      தமிழகம்
Modi 2023 07 30

திருச்சி, பிரதமர் மோடி பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் திருச்சி பஞ்சப்பூரில் இன்று (புதன் கிழமை) மாலை நடக்கிறது. இதில் தேசிய ஜனநாயக கட்சியில் இடம்பெற்றுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

கடந்த மாதம் திருவள்ளூரில் பிரதமர் மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி. வி.தினகரன், பா.ம.க. தலைவர் அன்புமணி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் முதன்முறையாக ஒன்றாக பங்கேற்றனர். பின்னர் 2-வது முறையாக புதுச்சேரி மற்றும் மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். 

அந்த வகையில் மூன்றாவது முறையாக பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் இன்று திருச்சியில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பா.ம.க. தலைவர் அன்புமணி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், ஐ.ஜே.கே. தலைவர் பச்சமுத்து மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த பொதுக்கூட்டத்துக்கு 30 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொண்டர்கள் அமர 76 ஆயிரம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. மேலும் இதில் 5 லட்சம் தொண்டர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மத்திய மண்டலத்தைச் சேர்ந்த 12 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். முன்னதாக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர், டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார் அங்கிருந்து ஹெலிகாப்டரில் பொதுக்கூட்டம் நடைபெறும் பஞ்சப்பூர் பகுதிக்கு செல்கிறார்.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. டெல்லியில் இருந்து வருகை தந்த சிறப்பு பாதுகாப்பு குழு ஐ.ஜி. நவநீக்குமார், திருச்சியில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். மேலும் பொதுக் கூட்டம் நடை பெறும் முன்னேற்பாடுகளை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகள், பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், திருச்சி மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் மேற்பார்வையிட்டு கவனித்து வருகின்றனர்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி 3-வது முறையாக இன்று தமிழகம் வரும் நிலையில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.தமிழ்நாட்டில் எப்போதும் என காவிக்கு இடமில்லை கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். இவற்றுக்கெல்லாம் பிரதமர் மோடி இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் பொதுக்கூட்டத்துக்கு முன்னதாக அதே பகுதியில் மத்திய அரசின் விழா நடைபெறுகிறது. இதை பிரதமர் மோடி புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளார். தி.மு.க. மாநாட்டை தொடர்ந்து பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து