Idhayam Matrimony

சர்வதேச விமான நிலையமாக மாறும் மதுரை விமான நிலையம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

செவ்வாய்க்கிழமை, 10 மார்ச் 2026      தமிழகம்
Madurai-Airport 2024-09-11

புதுடெல்லி, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விமான நிலைய ஓடுபாதை நீட்டிக்கப்படும். புதிய முனையம் அமைக்கப்படும்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று 6 மிகப்பெரிய திட்டம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இது 8.80 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கான ஆலோசனை. இதில் ஜல் ஜீவன் திட்டம் 2.0, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்துதல், மேற்கு வங்கத்தில் சந்திராகாச்சி- கராக்பூர் 4-வது ரயில்வே பாதை, சைந்தியா- பாகுர் 3-வது பாதை, மத்திய பிரதேசத்தில் பத்னாவார் தண்ட்லா- திமார்வானி 4 வழி நெடுஞ்சாலை திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து