எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, கோவையில் ஜி.டி.நாயுடுவின் திருவுருவ சிலை மற்றும் மெரினாவில் ரூ.1.43 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கல்விச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நேற்று கோவையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான ஜி.டி.நாயுடுவின் திருவுருவ சிலையை காணொளிக்காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் சென்னை மெரினா கடற்கரையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.1.43 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கல்விச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 'கற்றனைத்தூறும் அறிவு' என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள கல்விச்சிலையை திறந்துவைத்த முதல்வர் கற்றனைத்தூறும் அறிவு! சாதனைச் சரித்திரம் நூலையும் வெளியிட்டார்.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொண்டு வரும் சாதனைகளை விளக்கும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக அரசு, இல்லம் தேடி கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், திறன் இயக்கம் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களை விளக்கும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


