எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பூர், திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ. 41 லட்சம் தேர்தல் பறக்கும் பட்டையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூரில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ. 41 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் எட்டு சட்டமன்ற தொகுதிகளில் 72 தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் 72 நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிரசாதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அவிநாசி சாலை மேம்பாலம் அருகே பறக்கும் பட்டையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது, இருசக்கர வாகனத்தில் வந்த பங்கஜ் என்பவர் அணிந்திருந்த பேக்கில் ரூ.35 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பறக்கும் படையினர் அந்தப் பணத்தை கைப்பற்றி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர்.
இதுகுறித்து நடத்திய விசாரணையில், பங்கஜ் என்பவர் பெங்களூரில் இருந்து ரயில் மூலம் திருப்பூர் வந்ததும் திருப்பூரில் பேப்ரிக் கொள்முதல் செய்வதற்காக அந்த பணத்தை கொண்டு வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இருப்பினும் அதற்கான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் தேர்தல் அலுவலர்கள் அதனை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்கள் காட்டி பணத்தை பெற்று செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
இதேபோல் குமரன் சாலையில் வாகன தணிக்கையின் போது பொள்ளாச்சியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது வாகனத்தை சோதனை செய்தனர். ஊடகம் என ஒட்டப்பட்டு இருந்த வாகனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.6 லட்சம் இருந்தது தெரிய வந்தது. அவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் திருப்பூர் மாநகரில் ஒரே நேரத்தில் இரு வேறு பகுதிகளில் ரூ. 41 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


