எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சென்னை மாதவரம் அருகே மஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள பழைய கட்டிடத்தில் பட்டாகத்தியுடன் ஒருவர் பதுங்கி இருப்பதாக அடையாளம் தெரியாத நபர் மூலம் காவல் துறை கட்டுப்பாட்டறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாதவரம் காவல்துறையினர் நேற்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் மஞ்சம்பாக்கத்தில் உள்ள பழைய கட்டடத்தை சுற்றிவளைத்தனர்.
பிறகுதான் உள்ளே பதுங்கியிருந்த கொலையாளி கணேசன் என்ற தொப்பை கணேசன் என காவல்துறையினருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவரை பிடிக்க முன்றனர். அப்போது காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணி, காவலரான தினேஷ் ஆகிய இருவரையும் கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளார்.
இந்த நிலையில் காவல்துறையினர் தற்காப்புக்கு ரவுடி தொப்பை கணேசனை என்கவுன்டர் செய்தனர். இதைத்தொடர்ந்து தொப்பை கணேசனின் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த இரு போலீஸாரையும் அதே ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சென்னையில் பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளியான கணேசன் (எ) தொப்பை கணேசன் மீது சென்னையில் மட்டுமே சுமார் 30 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இவர் மீது 3 கொலை வழக்குகள், 8 கொலை முயற்சி வழக்குகள், 2 கொள்ளை வழக்குகள், 8 கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகளும் உள்ளன. தொப்பை கணேசன் யாரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்ட முற்பட்டார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


