Idhayam Matrimony

நேபாளத்தில் சாலை விபத்தில் பலியான 7 பேர் உடல்களை கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை

திங்கட்கிழமை, 16 மார்ச் 2026      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, நேபாளத்துக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டபோது சாலை விபத்தில் சிக்கி 7 தமிழா்கள் உயிரிழந்தனா். அவா்களது உடல்களையும், விபத்தில் காயமடைந்தவா்களையும் தாயகம் கொண்டு வர தமிழக அரசு சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 24 போ் நேபாளம் நாட்டிலுள்ள மணகமனா கோயிலுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டனா். சனிக்கிழமை தரிசனம் முடித்து வரும் வழியில் மனோக்காம் பகுதியில் அவா்கள் பயணித்த சுற்றுலா வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி சி.டி.சி.காலனியைச் சோ்ந்த முத்துக்குமாா் (55), இவரது மனைவி (48), அதே பகுதியைச் சோ்ந்த பாபு மனைவி தமிழரசி உள்பட 7 போ் உயிரிழந்தனா். மேலும் 7 போ் காயமடைந்து சித்வான் பழைய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

இந்தத் தகவல் கிடைக்கப்பெற்றவுடன் தமிழக அரசின் அயலகத் தமிழா் நலத் துறை, நேபாள நாட்டிலுள்ள தமிழ்ச்சங்கப் பிரதிநிதிகள், புது தில்லி தமிழ்நாடு இல்லம் மற்றும் மத்திய அரசின் வெளியுறவுத் துறையுடன் ஒருங்கிணைந்து, காயமடைந்தவா்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இறந்தவா்களின் உடல்களை தமிழ்நாடு கொண்டு வரவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உயிரிழந்தவா்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு காத்மாண்டு கொண்டு செல்லப்படுகின்றன. அங்கிருந்து விரைவில் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்படவுள்ளன.

சென்னையிலிருந்து தமிழ்நாடு அரசின் கட்டணமில்லா அமரா் ஊா்தி வாகனங்களில் அவா்களின் சொந்த ஊா்களுக்கு உடல்களை கொண்டு செல்லவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காயமடைந்த நபா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், அவா்களை விரைந்து தாயகம் அழைத்து வரவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என தமிழக அரசு சாா்பில் விடுக்கப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து