Idhayam Matrimony

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு

திங்கட்கிழமை, 16 மார்ச் 2026      தமிழகம்
Saakithya-Academy-Award

சென்னை, 2025-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் என்ற புத்தகத்துக்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாக சாகித்திய அகாடமி விருது கருதப்படுகிறது. நாட்டின் அதிகாரப்பூர்வமான 24 மொழிகளில், கவிதை, சிறுகதை, நாவல், இலக்கிய ஆய்வு படைப்புகளில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தந்த மொழிகளில் எழுத்தாளர்கள் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். முன்னதாக 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் நடைபெற இருந்தது.

ஆனால், விருதுகளை இறுதி செய்வதில் இழுபறி நீடித்ததால் அந்த நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனால், செய்தியாளர்களுடனான சந்திப்பையும் சாகித்திய அகாடமி நிர்வாகிகள் ரத்து செய்திருந்தனர். இந்நிலையில் சாகித்திய அகாடமி, அதிகாரப்பூர்வமாக விருது பட்டியலை வெளியிட்டுள்ளது. 2025-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழில் 2024-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருதை, திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908 (ஆய்வு நூல்) புத்தகத்துக்காக எழுத்தாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து