முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
காரில் செல்லும் போது தும்மினால் 50 அடி தொலைவுக்கு கண்கள் மூடி கொள்ளும்

பொதுவாக நாம் தும்மும்போது கண்களை மூடிக் கொள்வது வழக்கம். கண்களை திறந்து கொண்டு ஒரு போதும் தும்ம இயலாது என்பது உங்களுக்கு தெரியுமா... அப்படி ஏதும் விபரீதத்தில் ஈடுபடாதீர்கள்... கண்களை திறந்து வைத்து தும்மினால் விழி வெளியே பிதுங்கி விடும். அதே நேரத்தில் மணிக்கு 60 மீட்டர் வேகத்தில் செல்லும் காரில் பயணிக்கும் போது நீங்கள் தும்மினால் அப்போதும் கண்களை மூடிக் கொள்வீர்கள். ஆனால் எவ்வளவு தொலைவுக்கு தெரியுமா... 50 அடி தொலைவுக்கு. கடந்த 2014 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் வாகனஓட்டிகள் தும்மும்போது அவர்களுக்கு தற்காலிகமாக பார்வை இழப்பு ஏற்படுகிறது. இதனால் இங்கிலாந்தில் மட்டும் வாரத்துக்கு 2500க்கும் அதிகமாக விபத்துகள் ஏற்படுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

முத்திரையிட பயன்படும் அரக்கு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என தெரியுமா?

முந்தைய காலங்களில் மூடி சீலிடுவதற்கும் அவற்றில் அரசாங்க முத்திரை இடுவதற்கும் அரக்கு என்ற  பொருளை பயன்படுத்துவது வழக்கம். இன்றைக்கும் ஜப்தி செய்யப்பட்ட இடங்களை நீதிமன்ற ஊழியர்கள் பூட்டி விட்டு அதன் மீது துணியை சுற்று அரக்கால் சீல் வைப்பதை நாம் பார்த்திருக்கலாம். மேலும் இந்த அரக்கு உணவு பண்டங்கள், மரச் சாமான்கள் போன்றவற்றுக்கு நிறமேற்றம் செய்யவதற்கும், பர்னிச்சர் பொருள்களை செம்மைப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. அதெல்லாம் சரி.. இது எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என தெரியுமா... இந்தியா மற்றும் தாய்லாந்தில் உள்ள காடுகளில் மரங்களில் வசிக்கும் ஒரு வகை பூச்சியினத்தில் இருந்துதான் இந்த அரக்கு பெறப்படுகிறது. இதன் பெண் பூச்சிகள் உருவாக்கும் திரவம்தான் பசை போல இறுகி பின்பு அரக்காக மாறுகிறது என்றால் ஆச்சரியம் தானே.

ஷூக்களின் நீளம் என்ன வென்று உங்களுக்கு தெரியுமா?

ஒரு கால கட்டத்தில் அதிகாரத்தின் குறியீடாகவும், செல்வந்தர்களின் அடையாளமாகவும் ஷூக்கள் அணியும் பழக்கம் நிலவி வந்தது நமக்கு தெரியும். பின்னர் போர் வீரர்களும், உயர் அதிகாரிகளும் அவற்றை அணிய தொடங்கினர். இன்றைக்கு விற்பனை பிரதி நிதி தொடங்கி அனைத்து தரப்பினரும் அணியும் பேஷன் பொருளாக ஷூ மாறியுள்ளது. மத்திய கால கட்டத்தில், அதாவது 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஷூக்கள் சுமார் 2 அடி நீளம் கொண்டவையாக தயாரிக்கப்பட்டன என்றால் ஆச்சரியம் தானே...இவை மென்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக கேசம், கம்பளி, இறகு போன்றவை திணிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டன. தற்போது இந்த வகை ஷூக்கள் விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகங்களில் மட்டுமே காணக்கிடைக்கின்றன.

முன்னாள் அதிபர் லிங்கன் ஒரு குத்துச்சண்டை வீரர் என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம், அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், மிக சிறந்த ஜனநாயகவாதியுமான ஆபிரகாம் லிங்கன் அரசியல்வாதியாக ஆவதற்கு முன்பாக குத்து சண்டை வீரராக திகழ்ந்தார். அவர் 300க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கு பெற்றுள்ளார். ஒரே ஒரு முறை மட்டுமே வெற்றி பெற வாய்ப்பிருந்தும் அவரது உயரம் காரணமாக பந்தயத்தில் தோற்றார். அவரது உயரம் 6 அடி 4 அங்குலம். அவர் மிக சிறந்த தந்்திரங்களை கையாண்டு வெற்றியை ஈட்டினார். இதனால் அமெரிக்காவின் ஈடு இணையற்ற வீரர் என புகழப்பெற்றார்.

மூட்டை பூச்சிகளை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?

இரவில் நமது தூக்கத்தை கெடுத்து கடும் எரிச்சலையும் மன உளைச்சலையும் கொடுப்பதுடன் நமது ரத்தத்தையும் பதம் பார்ப்பவை மூட்டை பூச்சிகள். இன்றை கால கட்டத்தில் நகர்ப்புறங்களில் மூட்டை பூச்சிகள் அருகிவிட்டாலும் (அதற்கு பதிலாக கொசுக்கள்) ஊரக பகுதிகளில் ஜாம் ஜாம் என்று வாழ்க்கை நடத்தியே வருகின்றன. இவை பூமி பந்தில் நெடுங்காலமாக உயிர்த்திருக்கும் ஜீவராசி என்றால் ஆச்சரியம் தானே... அதாவது மூட்டை பூச்சிகள் டினோசர்கள் வாழ்ந்த கால கட்டம் முதல் இந்த பூமியில் இருந்து வருகின்றனவாம்... அதாவது 115 மில்லியன் ஆண்டுகளாக வாழ்வதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். பார்க்க சாதாரணமாக நமது படுக்கைகளில் காணப்படும் மூட்டை பூச்்சிகளின் வரலாறு மிகவும் சிக்கலானது என்கிறது விலங்கியல் பரிணாமவியல்... என்ன சரிதானே.

இடது கை பழக்கம் உள்ளவர்கள் மரணம் ஏற்பட என்ன காரணம் தெரியுமா?

நம்மில் பலரையும் நாம் பார்த்திருக்க கூடும். அவர்கள் நம்மை போல அல்லாமல் இடது கை பழக்கம் உடையவர்களாக இருப்பர். இடது கையால் எழுதுவது, இடது கையால் வேலைகளை செய்வது, சாப்பிடுவது. அவ்வளவு ஏன் நமது கிரிக்கெட் வீரரான சிகர் தவான் போன்றவர்கள் விளையாட்டில் கூட பட்டையை கிளப்புவதை பார்த்திருக்கலாம்... ஆனால் ஒன்று தெரியுமா இந்த உலகம் வலது கை பழக்கமுடையவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இடது கை பழக்கமுடையவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வலது கை காரர்கள் உருவாக்கிய கருவிகளால் சுமார் 2500 பேர் வரை இடது கை பழக்கமுடையவர்கள் உயிரிழக்கும் நிலை உள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. என்ன ஒரு உலகம் பாருங்கள்.