நோபல் பரிசு பெற்ற முதல் கருப்பின பெண்ணை தெரியுமா. அவர் பெயர் வங்காரி மாத்தாய். கென்யா நாட்டின் இகதி எனும் சிறிய ஊரில் 1940-ம் ஆண்டு ஏப்ரல் 1 இல் பிறந்தவர் வங்காரி மாத்தாய். பெண்கள் கல்வி கற்க முடியாத சூழலில் இவர் படித்து அமெரிக்காவில் பட்டம் பெற்றார். மேலும் கென்யாவின் முதல் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர். நைரோபி பல்கலையில் பேராசிரியரானார். முதல் பெண் பேராசிரியர் என்ற பட்டத்தையும் பெற்றார். மார்ட்டின் லூதர் கிங் போராட்டங்களால் ஈர்க்கப்பட்ட அவர் தனது நாட்டில் இயற்கை வளத்தை காப்பதற்காக பசுமை பட்டை இயக்கத்தை உருவாக்கினார். அதன் மூலம் 30 ஆண்டுகளில் 3 கோடி மரங்களை நட முயற்சி மேற்கொண்டார். இயற்கை, சுற்றுச்சூழல் மட்டுமின்றி, பெண்கள் கல்வி, ஒடுக்குமுறை, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தினார். இவரது இயக்கம் ஆப்பிரிக்கா முழுவதும் பரவியது. இவரது போராட்டத்தை ஒடுக்க முயற்சித்த அரசின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இவருக்கு கிடைத்த செல்வாக்கால் தேர்தலில் போட்டியிட்டு அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சராகவும் பதவி வகித்தார். இயற்கை வளத்தை மேம்படுத்த எண்ணற்ற முயற்சிகளை அவர் மேற்கொண்டார். இதன் காரணமாக அவருக்கு 2004-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது.
![]() 12 hours 30 sec ago |
![]() 12 hours 2 min ago |
12 hours 4 min ago |
![]() 12 hours 6 min ago |
![]() 12 hours 7 min ago |
![]() 12 hours 8 min ago |
பழந்தமிழர்கள் அன்றாடம் தங்களது பணியின் போது ஏராளமான இசை வகைமைகளில் பாடல்களை தாமாகவே புனைந்து பாடினர். நெடுந்தூரம் வண்டிப் பயணத்தின்போது தென்பாங்குப்பாட்டு (தெம்மாங்கு) பாடி பயணித்தனர். தொன்று தொட்டு பாடி வந்துள்ள தமிழ் இசைப்பாட்டு வகைகளில் சில : அக்கைச்சி, அச்சோ, அப்பூச்சி, அம்மானை, ஆற்றுவரி, இம்பில், உந்தியார், ஊசல், எம்பாவை, கப்பற்பாட்டு, கழல், சந்துகவரி, சாக்கை, காளம், கானல்வரி, கிளிப்பாட்டு, குணலை, குதம்பை, குயில் குரவை, குறத்தி, கூடல், கொச்சகச்சார்த்து, கோத்தும்பி, தோழிப்பாட்டு, சங்கு சாயல்வரி, சார்த்துவரி, சாழல், செம்போத்து, தச்சராண்டு, தச்சாண்டி, தாலாட்டு, திணைநிலைவரி, திருவங்கமாலை, திருவந்திகாப்பு, தெள்ளோளம், தோளேடக்கம், நிலைவரி, நையாண்டிளா, பகவதி, படைப்புவரி, பந்து, பல்லாண்டு, பல்லி, பள்ளியெழுச்சி, பாம்பாட்டி, பிடாரன், பொற்சுன்னம், மயங்கு திணை நிலைவரி, முகச்சார்த்து, வள்ளைப்பாட்டு, சிந்து, நொண்டிச்சிந்து, கும்மி, கோலாட்டம், ஆனந்தக்களிப்பு, கீர்த்தனம் முதலியன. தமிழ் நாடோடி இசைப்பாடல் வகைகள் : உழவுப்பாட்டு, ஓடப்பாட்டு, நலங்கு, ஆரத்தி, ஊஞ்சல், புதிர்ப்பாட்டு, பழமொழிப் பாட்டு, கோமாளிப்பாட்டு, ஏற்றப்பாட்டு, இறைவைப்பாட்டு, காவடிப்பாட்டு, கப்பற்பாட்டு, படையெழுச்சி, தாலாட்டு, கல்லுளிப்பாட்டு, பாவைப்பாட்டு, வைகறைப்பாட்டு, மறத்தியர் குறத்தியர் பாட்டுகள், பள்ளுப்பாட்டு, பலகடைப்பாட்டு, வள்ளைப்பாட்டு, பிள்ளைப்பாட்டு முதலியன.
இன்றைய நவீன மனிதன் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் வரைபடங்கள், சாலை குறியீடுகள், திசைகாட்டிகள், ஜிபிஎஸ் கருவிகள் என ஏரானமானவற்றை நம்பி இருக்க வேண்டியுள்ளது. அப்படியும் சிலர் வழி தவறி விடுகின்றனர். ஆனால் எந்த வரைபடத்தையும் வைத்திருக்க முடியாத நீருக்கு அடியில், பல்லாயிரம் மைல்கள் ஆழமுள்ள கடலுக்குள்.. அதுவும் சூரிய ஒளி புகாத கும்மிருட்டில்.. ஆனால் சில சுறாக்கள் தங்கள் உடலிலேயே இயற்கை ஜிபிஎஸ் அல்லது காந்தமானியை கொண்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பல நூறு மைல்கள் சென்றாலும் மீண்டும் தனது இருப்பிடத்துக்கு மிகச் சரியாக அவை திரும்பி விடுகின்றனவாம். ஆய்வில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து கடலுக்கு அடியில் நீந்தி சுறாக்கள் மிகச் சரியாக ஆஸ்திரேலியா வந்து விட்டு 9 மாதங்களுக்கு பிறகு திரும்பிச் செல்வது தெரியவந்துள்ளது. இது இயற்கையின் ஆச்சரியம் தானே..
அதிகாலை சுவாமியை சுப்ர பாதத்துடன் துயில் எழுப்பிய பின்னர், அவருக்கு வெண்ணெய், நுரை ததும்ப பசும்பால் படைக்கப்படுகிறது. தோமாலை, சகஸ்ரநாம அர்ச்சனை சேவைகளுக்குப் பிறகு சுவாமிக்கு எள், சுக்கு, வெல்லம் கலந்த பானகம் சாத்துபடி. இவைகளைத் தொடர்ந்து காலை 6 மணியிலிருந்து 6.30 மணிக்குள் பால போக நைவேத்தியமாக புளியோதரை, தயிர் சாதம், வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், ரவா கேசரி சமர்ப்பிக்கப்படும். இதன் பின்னர் சர்வ தரிசனம் தொடங்கும். நண்பகல் 11 மணியில் இருந்து 11.30 மணிக்குள் ராஜ போகம் நைவேத்தியம். இதில், வெண் சாதம், சர்க்கரை அன்னம், புளியோதரை, கூடை அன்னம், போன்றவை படைக்கப்படுகிறது. மாலை 7 மணியளவில் சயன போக நைவேத்யத்தில் மிளகு அன்னம், தோசை, லட்டு, வடை மற்றும் பல காய்கறிகளால் சமைக்கப்பட்ட அன்னம் சமர்ப்பிக்கப்படும்.இத்துடன் ஏழுமலையானின் ‘மெனு’ முடியவில்லை. இரவு ‘திருவீசம்’ எனும் பெயரில் வெல்லத் தால் தயாரிக்கப்பட்ட அன்னம் படைக்கப்படும். பின்னர் சுவாமி பள்ளியறைக்குச் செல்லும் முன் ஏகாந்த சேவையின்போது, நெய்யினால் மிதமாக வறுக்கப்பட்ட பாதாம், முந்திரி மற்றும் பழங்கள், பால் போன்றவை சமர்ப்பிக்கப்படுகிறது. பின்னர் இவை பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும்.
மொபைல் போன் வைத்திருப்பவர்களின் கவலை பெரும்பாலும் சட்டென்று கரைந்துவிடக் கூடிய பேட்டரி சார்ஜ்தான். தற்போது வெளியூர் பயணங்களின் போது பலரும் பவர் பேங்க் வைத்திருப்பதை பார்க்க முடியும். ஆனால் மொபைலை சார்ஜ் செய்வதாக இருந்தாலும், பவர் பேங்கை சார்ஜ் செய்வதாக இருந்தாலும் அதற்கான மின் இணைப்பை தேட வேண்டியது அவசியமாகும். மின் இணைப்பு கிடைக்காத வெட்ட வெளியில் இருக்க நேர்ந்தால், மொபைல் பேட்டரி சார்ஜ் டவுண் ஆகி விட்டால்.. மிகவும் கஷ்டம்தான். இதனால் நமது மனமும் டவுனாகி விடும். இனி அந்த கஷ்டம் வேண்டாம். மொபலை சார்ஜ் செய்ய தற்போது சோலார் மொபைல் சார்ஜர் வந்து விட்டது. இதற்கு சிறிய அளவு வெளிச்சம் போதும். அதை அப்படியே நமது மொபைலில் இணைத்து விட்டால்... நாள் முழுவதும் பேட்டரி டவுன் ஆகாமல் ஜாலியாக அரட்டை கச்சேரியை தொடரலாம்.. இதன் விலையும் சுமார் ரூ.300 லிருந்து தொடங்கி பல்வேறு ரகங்களில் ஆன் லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. இனி வாங்கி உங்களது நண்பிகள், நண்பர்களை அசத்துங்கள்..
மேரி கியூரியை அனைவருக்கும் தெரியும். அவர்தான் கதிர்வீச்சு மிக்க ரேடியம் என்ற தனிமத்தை கண்டு பிடித்தார். அவர் இறந்த பின் அவரது உடல் என்ன ஆனது தெரியுமா.. வாருங்கள் பார்க்கலாம்... நோபல் பரிசு பெற்ற உலகின் முதல் பெண் மேரி கியூரி. இயற்பியலுக்கு ஒன்று, வேதியியலுக்கு இன்னொன்று என இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்றவர் இன்றுவரை இவர் மட்டுமே. மேரி கியூரியும் பியரி கியூரியும் தனித்தனியே ஆராய்ச்சியை தொடர்ந்தனர். கதிரியக்க தனிமத் தேடலைத் தொடர்ந்த மேரி, அடுத்தடுத்து யுரேனியம், பொலோனியம் ஆகியவற்றைவிட அதிக கதிர்வீசும் மற்றொரு தனிமத்தைக் கண்டுபிடித்தார். அதற்கு ’ரேடியம்’ எனப் பெயரிட்டார். மேரி கியூரியின் கதிரியக்க ஆராய்ச்சிக்காக 1903-ல் பியரி கியூரி, ஹென்றி பெக்குரல் ஆகியோருடன் கூட்டாக இயற்பியலுக்கான நோபல் பரிசு தரப்பட்டது. நோபல் பரிசு பெற்ற முதல் பெண் மேரி கியூரி. மேரி கி யூரி மறைந்து போய் 150 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனா ல் அவர் பயன்படுத்திய பொருட்களி ன் மேல்பாதிக்கப்பட்டுள்ள ரேடியம் தனிம கதி ர்வீச்சின் தாக்கம் இன்னும் அவற்றில் உள்ளன. இது குறைய இன்னும 1500 ஆண்டுகள் ஆகும். அதுதான் கதி ர்வீச்சு தனிமத்தின் குணாம்சம் . அதன் அரை ஆயுள் காலம் 1500 ஆண்டுகள் ஆகும். எனவே மேரி கி யூரி மற்றும் பியரி கியூரி பயன்படுத்திய நோ ட்டுகள், பேப்பர்கள், அவர்களின் எழுதுகோல்கள், போன்றவற்றை ஒரு பெ ட்டியி ல் போட்டு அதனை ஒரு அகுல கனமுள்ள காரிய தகடு கொ ண்டு மூடி பத்திரமாக வை த்துள்ளனர். அதுபோல மேரிகியூரி மற்றும் பியரி கியூரி இருவரின் உடல்களிலும் கூட ரேடியம் தனிமத்தின் கதிர்வீச்சு இருக்கும், எனவே அவர்களின் கல்லறையும் கூட ஒரு அங்குல கனமுள்ள காரீய தகடால் மூடப்பட்டு வைக்கப்பட்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
சித்த மருத்துவ குறிப்புக்கள்
KFC Style பிரைடு சிக்கன்
2 days 18 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்
6 days 12 hours ago |
பக்காலா மீன் வறுவல்
1 week 2 days ago |
பாசி பருப்பு பாயாசம்
1 week 5 days ago |
தந்தூரி சிக்கன்
2 weeks 2 days ago |
ஆப்பிள் அல்வா
2 weeks 5 days ago |