Idhayam Matrimony
முகப்பு

காற்றிலிருந்து உணவு

Image Unavailable

மனிதன் வெறும் காற்றை சுவாசித்து உயிர் வாழ முடியாது, அவனுக்கு உணவும் தண்ணீரும் வேண்டும் என்பது நாம் அனைவருக்கும் நன்கு தெரியும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீருக்கு மிகவும் சிரமப்படும் பாலைவன பகுதி மக்களின் வசதிக்காக காற்றிலிருந்து தண்ணீரை தயாரிக்கும் ரோபோவை விஞ்ஞானிகள் வடிவமைத்திருந்தனர். தற்போது உணவையும் காற்றிலிருந்தே தயாரிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. பின்லாந்தை சேர்ந்த சோலார் புட்ஸ் என்ற நிறுவனம், காற்றை மாசுபடுத்தும் கரியமில வாயுவை சூரிய மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு, சோலெய்ன் என்ற புதுமையான புரத மாவை உற்பத்தி செய்யத் துவங்கியுள்ளது. அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் தொழில்நுட்பத்தை பின்பற்றி இந்த சாதனையை சோலார் புட்ஸ் செய்துள்ளது .

வழக்கமான தானிய மாவுகளில் இருக்கும் அதே சுவையும், புரதம், கார்போ ஹைட்ரேட் மற்றும் சிறிது கொழுப்பு ஆகியவை சோலார் புட்ஸ் நிறுவனத்தின் காற்று மாசிலிருந்து தயாரிக்கும் சோலெய்ன் புரத்ததிலும் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ சோலெய்ன் தயாரிக்க எரிபொருள் செலவு குறைவு. ஒரு கிலோ சோயாவை உற்பத்தி செய்ய 2,500 லிட்டர் தண்ணீர் தேவை. ஆனால், சோலெய்னுக்கு வெறும், 10 லிட்டர் தண்ணீரே போதும். இதனால், பருவநிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், சோலெய்ன் புரத மாவை விற்பனை செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago