எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
6 வயதில் கோடீஸ்வரனான சிறுவன்
ஆறே வயதான ரியான் என்ற சிறுவன் தனது பொம்மைகளை மதிப்பீடு செய்யும் வீடீயோவை பிரபலமான யூடியூப்பில் அப்ளோடு செய்ததின் மூலம் ஒரு வருடத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான பணத்தை அச்சிறுவன் ஈட்டியுள்ளான். பொம்மைகளை அதிகமாக விரும்பும் ரியான் எந்த ஒரு பொம்மை வாங்குவதற்கு முன்பும் அதன் மதிப்பீடு பற்றி ஆராய்ந்த பின்பே அதனை வாங்குவார். தனது நான்கு வயதிலேயே தனது பெற்றோரின் உதவியுடன் தனது 'ரியான் டாய்ஸ் ரெவியூ' (Ryan Toysreview) என்கிற யூடியூப் சேனலை மார்ச் மாதம் 2015 ஆம் ஆண்டு துவங்கினர். ஆரம்பத்தில், ரியனின் காணொளி பிரபலமடையவில்லை ஆனாலும் ரியான் மற்றும் அவனது பெற்றோர்கள் விடாமுயற்சியாக தினந்தோறும் ஒரு காணொளியை பதிவேற்றம் செய்தனர் . ஜூலை 2015 ஆம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்ட ரியனின் 'ஜியன்ட் எக்க் சர்ப்ரைஸ் '(Giant Egg Surprise) என்ற காணொளி இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவை இதுவரை 800 மில்லியன் மக்கள் பார்த்து மகிழ்ந்துள்ளனர். இந்த யூடியூப் சேனலின் மூலம் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருமானம் மட்டுமே மாதம் பத்து லட்சமாகும் . இந்த யூடியூப் சேனல் இதுவரை 1 கோடி ரசிகர்களை கொண்டுள்ளது .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


