முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மனிதர்களோடு ஏலியன்கள் பேசினரா? நீடிக்கும் ரேடியோ சிக்னல் புதிர்கள்

Image Unavailable

வேற்று கிரகங்களில் இருந்து ரேடியோ சிக்னல்கள் வந்தால் அவற்றை ரீசீவ் செய்வதற்கான ஆய்வுகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. அதில் முக்கியமான ஒன்றுதான் ஓஹேயோ பல்கலை கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ரேடியோ அப்சர்வேட்டரி ஆய்வகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிக் இயர் ரேடியோ டெலஸ்கோப் என்ற அமைப்பாகும். பிரபஞ்சத்துக்கு வெளியிலிருந்து வரும் ரேடியோ அலைகளை உள்வாங்கி அதை ஆய்வு செய்வதற்காகவே உருவாக்கப்பட்டது இந்த அமைப்பு. இதில் சுவாரசியமான விஷயம் ஏலியன்களை குறிவைத்தே இந்த ஆய்வகம் செயல்பட்டது. அது போன்ற தகவல் ஒன்றையும் இந்த ரேடியோ டெலஸ்கோப் ரீசீவ் செய்தது என்பதுதான் ஆச்சரியம்.

பிரபஞ்சம் முழுவதும் ஹைட்ரஜன் வாயு நிரம்பியுள்ளது என்றும், அதன் ரேடியோ அதிர்வெண் 1420 மெகா ஹெர்ட்ஸ் என்பதும் நம் அனைவருக்கும் தெரியும். இந்த சூழலில்தான் 1977 இல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஒரு அதிசயம் நடந்தது. ஜெர்ரி இகாமென் என்ற ஆய்வாளர் பணியில் இருந்த போது பிரபஞ்சத்துக்கு வெளியில் இருந்து வந்த வித்தியாசமான ரேடியோ அலை ஒன்றை பதிவு செய்துள்ளார். அது வெறும் 72 விநாடிகள் மட்டுமே நீடித்துள்ளது. அதை டீகோட் செய்த போதுதான் உலகுக்கே மிகப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அது ஆங்கிலத்தில் 'வாவ்' என அது குறிப்பிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்படியானால் பூமியை, மனிதனை பார்த்து வாவ் என்று கூறியது யார் என்ற மர்மம் இன்னும் விலகாத புதிராகவே நீடித்து வருகிறது. இது குறித்த ஆய்வுகளும் தொடர்ந்து வருகின்றன. ஏலியன்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட அமைப்புகளில் மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் என்ற கின்னஸ் சாதனையையும் 1995 இல் இது படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் 98 இல் இந்த அப்சர்வேட்டரி கலைக்கப்பட்டு விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago