எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உச்சத்துல சிவா
உச்சத்துல சிவா
““உச்சத்துல சிவா” படம் பற்றி நடிகர் கரண் கூறியதாவது, நான் கமல் சாரால் அறிமுகம் ஆனவன். அதனால்தானோ என்னவோ அவரின் கலை பாதிப்பு எனக்கு உண்டு. ஒரே மாதிரியாக நடிப்பதில் கமல்சாரை போல எனக்கும் உடன்பாடு இல்லை. நடிப்பில் புதுமையாக மாறிவரும் ரசிகர்களின் ரசனைக்கேற்ப ஏதாவது செய்து கொண்டே என்னை ரசிகர்களுக்கேற்ப புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும் என எண்ணுபவன் நான்.
பொதுவாக வாய்ப்புகள் குறையும் பொழுதுதான் மாற்று முயற்சியில் இறங்குவார்கள். நான் 2002ம் ஆண்டு காலகட்டத்தில் பிசியாக இருந்தபோது இரண்டு வருட இடைவெளி எடுத்துக்கொண்டு கொக்கி படம் மூலம் கதாநாயகனாகி ரசிகர்களிடம் வெற்றி பெற்றேன்.
எனது அடுத்தடுத்த படங்களும் ரசிகர்கள் நல்ல வெற்றியை கொடுத்தாலும் ஒரே மாதிரியான வேடங்கள், கதைகள் செய்வதில் ஒருவிதமான சலிப்பு ஏற்படுகிறது. எனவேதான் இம்முறையும் சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டேன்.
உள்ளங்கை செல்போனில் உலகை சுருக்கி வைத்துக்கொண்டு பயணிக்கும் ரசிகர்களின் மனவேகத்துக்கும், ஒய்டாங்கில் பார்வைக்கும் ஈடுகொடுக்கும் விதமான படங்கள் பண்ண வேண்டும் என விரும்பினேன். அதற்கான தேடுதலில் ஈடுபட்டு இயக்குனர் ஜேப்பியை கண்டுபிடித்தேன். எனது எண்ண ஓட்டமும், அவர் எண்ண ஓட்டமும் ஒன்றாக இருந்தது எனவேதான் மிக பிரம்மாண்டமாக “உச்சத்துல சிவா” உருவானது. “உறுதிமிக்கவன் தொடர்ந்து பயணிப்பான்” என்ற ஒற்றை வரி செய்தியை வைத்துக் கொண்டு அடிமுதல் நுனிவரை அதிரடியாய் ஓடியிருக்கிறோம்.
அழுக்கில்லாத ஃப்ரேம், அழகான கதாபாத்திரம் கொண்ட “உச்சத்துல சிவா” படம் மூலம் துள்ளி குதித்து வருகிறேன். இந்த உற்சாகம் எனக்கு பிடித்திருக்கிறது என்கிறார் கரண்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


