எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நமீதா பளிச் பேட்டி
நமீதா பளிச் பேட்டி
தமிழ் திரையுலகில் கடந்த 2002ம் ஆண்டு வெளி வந்த ‘எங்கள் அண்ணா’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நமீதா. இப்படத்தை தொடர்ந்து ஏய், இங்லீஸ்காரன், சாணக்யா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவர் திரையுலகில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஒரு படம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2010ம் ஆண்டு தமிழில் வெளி வந்த இளைஞன் படம் இவரது கடைசி படமாகும். நமீதாவின் உடல் எடை அதிகமான காரணத்தினால் பட வாய்ப்புகள் குறைந்த 5 வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார்.
தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் நடிக்க வந்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது, ‘நான் என்னுடைய உடலை 94 கிலோவில் இருந்து தற்போது 76 கிலோவுக்கு ஷாக்ஷி வெல்நெஸ் என்ற நிறுவனம் மூலம் நவீன சிகிச்சை எடுத்துக்கொண்டு குறைத்திருக்கிறேன். தற்போது புதியதாக பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது. தமிழில் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். இதற்காக மேலும் உடல் எடையை குறைக்கவும் முயற்சி எடுத்து வருகிறேன். எனக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அரசியலில் அமைச்சராகி மக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இதற்காக பல்வேறு கட்சிகளிலிருந்து எனக்கு அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அரசியலில் ஈடுபாடு இருப்பதால் குஷ்புக்கு போட்டி என்று நினைக்காதீர்கள்.
குஷ்பு எனக்கு அக்கா மாதிரி. வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் அரசியலில் குதித்து பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளேன். எனக்கு யார் மீதும் காதல் இல்லை. என்னுடைய திருமணத்தை கடவுள் தீர்மானிப்பார். என்னுடைய வருங்கால கணவர் கோடீஸ்வரனாகவோ அல்லது தொழில் அதிபராகவோ இருக்கவேண்டும் என்று ஆசைப்படவில்லை. தாடி வைத்துக் கொண்டு கண்ணாடி போட்டுக் கொண்டிருந்தால் கூட திருமணம் செய்துக் கொள்வேன். என்னுடைய ஆசை மச்சான் இதுவரை கிடைக்கவில்லை. அதுவரை காத்திருப்பேன். திருமணத்திற்கு பிறகு 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஷாக்ஷி வெல்நெஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சிவாஜி குணா கூறுகையில், எங்கள் ஷாக்ஷி டீம் நடிகை நமீதாவின் உடல் எடையை குறைப்பதை ஒரு சேலஞ்சாக எடுத்துக்கொண்டனர். தற்போது 2 மாதத்தில் 17 கிலோ எடையை குறைத்துள்ளனர். அறுவை சிகிச்சை மற்றும் டயட் இல்லாமல் சாதாரண உடற்பயிற்சி மூலம் இந்த பலன் கிடைத்துள்ளது. எனவே நடிகை நமீதாவை எங்கள் நிறுவனத்தின் பிரான்ட் அம்பாசிடராக நியமித்துள்ளோம் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


