எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'ஜித்தன் ரமேஷ்' ஏப்ரல் 8 ஆம் தேதி மீண்டும் பிறக்கிறார்!
'ஜித்தன் ரமேஷ்' ஏப்ரல் 8 ஆம் தேதி மீண்டும் பிறக்கிறார்!
"அ முதல் ஃ தானடா, இவ எவர்சில்வர் தட்டு தானடா!" என்ற ஜித்தன் படப்பாடலை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. தற்போது மீண்டும் அதே உற்சாகத்துடன் நடிகர் ரமேஷின் 'ஜித்தன் 2' திரைப்படம் வெளியாக உள்ளது. புதுமுக இயக்குனர் ராகுல் பரமஹம்சா இப்படத்தை இயக்க, வின்சென்ட் செல்வா கதை, வசனம் எழுதியுள்ளார். மேலும் மயில்சாமி, ரோபோ ஷங்கர், கருணாஸ் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
"என் வாழ்க்கையில் எனக்கு ஓர் மைல் கல்லாக அமைந்த திரைப்படம் 'ஜித்தன்'. அன்று முதல் இன்று வரை 'அ முதல் ஃ தானடா', பாடல் ஒலிக்காத கச்சேரியே கிடையாது. அதுபோல் 10 மடங்கு நச்சென்று ஒரு குத்து பாடலை இந்த படத்திற்காக இசையமைத்துள்ளேன். மேலும் வெளிநாட்டில் இருந்து பின்னணி இசைக்காக வரவழைக்கப்பட்ட சவுண்ட் ட்ராக்ஸ் படத்திற்கு கூடுதல் பலத்தை தரும்!", என்கிறார் கலகலப்பான ஸ்ரீகாந்த் தேவா.
இயக்குனர்-ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் அவர்களின் உதவியாளர் S.K.மிட்ஷெல் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாகிறது. 'படத்தின் கதைப்படி முதல் பாகத்தில் இறந்துப்போன ரமேஷ் இந்த பாகத்தில் மீண்டும் பிறந்து, பேயுடன் மாட்டிக்கொண்டு வாழும் தருணங்களே ஜித்தன் 2 வின் கதை கரு", என்கிறார் படத்தின் எழுத்தாளர் வின்சென்ட் செல்வா.
மேலும் அவர் கூறுகையில், "இந்த திரைப்படம் நிச்சயமாக ரசிகர்களின் மனதை வென்று, அவர்களின் உள்ளங்களில் இடம் பிடிக்கும்", என்றார். படத்தின் அறிமுக இயக்குனர் ராகுல் பரமஹம்சா கூறுகையில், "பொதுவாக பேய் என்றால் பயம் மட்டும் தான் என்று நினைத்து வருகிறார்கள். ஆனால், அதற்கு அப்பாற்பட்டு வேறு சில விஷயங்களும் உள்ளது என்ற கருத்தை புதியகோணத்தில் இந்த படம் மூலம் கூறி இருக்கிறோம்," என்கிறார்.
மொத்தத்தில் ஜித்தன் 2 அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெறும் என எதிர்பார்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |